Dindugal Srinivasan
Dindugal Srinivasan

Dindugal Srinivasan – திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாம்பழம் சின்னத்திற்கு பதில் ஆப்பிள் சின்னத்துக்கு வாய் தவறி வாக்கு கேட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார்..

இந்நிலையில் நேற்று பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் சீனிவாசன் பிரசாரம் செய்தார்.

அதில் பிரச்சாரத்தின் போது, அதிமுக கூட்டணி குறித்தும், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சாதனைகள் குறித்தும் விளக்கினார்.

அப்போதுதான் திண்டுக்கல் சீனிவாசன் இந்த தவறை செய்தார்.

வாக்கு கேட்டு பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “உங்கள் ஓட்டு மாம்பழ சின்னத்துக்கே என கூறுவதற்கு பதிலாக, உங்கள் ஓட்டு ஆப்பிள் சின்னத்திற்கே” என கூறினார்.

இதனால் அங்கிருந்தவர்கள், மற்றும் வேட்பாளரே அதிர்ச்சி அடைந்தார். மேலும் கூட்டத்தில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.

அமைச்சரின் சொந்த தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டிய பதற்றம் திண்டுக்கல் சீனிவாசனிடம் இருந்தது, அதனால் இவ்வாறு மாற்றி சொல்லி இருக்கலாம் என கருதப்படுகிறது.

பின்னர் சூழ்நிலையை சுதாரித்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் தனது தவறை திருத்திக் கொண்டார்.

இதுபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல்லில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘பிரதமர் நரேந்திர மோடி ஒரு பக்கம் போட்டியிடுகிறார் என்றால், மோடியின் பேரன் ராகுல் காந்தி இன்னொரு பக்கம் போட்டியிடுகிறார்’ என்று கூறினார் என்பது குறிப்பிடதக்கது.