
யாரும் எனக்கு உதவவில்லை: இயக்குனர் கௌதம் மேனன் வருத்தம்..
விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் பற்றி கௌதம் மேனன் பகிர்ந்த நிகழ்வுகள் காண்போம்..
‘சீயான்’ விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிதி பிரச்சினை உட்பட பல பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது.
பின்னர், ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படக்குழுவால் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை.
இந்நிலையில், கவுதம் வாசுதேவ் மேனன் தற்பொழுது மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ‘டோமினிக் லேடிஸ் பர்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியாகாத நிலையில் இருக்கும்போது, யாரும் எனக்கு உதவவில்லை. யாரும் அதைப்பற்றி கண்டுக்க கூட இல்லை.
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதை ‘ஓ அப்படியா’ என கேட்பார்கள். அதற்கு யாரும் சந்தோஷம் அடைய மாட்டார்கள். தாணு சார், லிங்குசாமி, இந்த இருவர் மட்டுமே எனக்கு போன் செய்து பேசினர்.
இத்திரைப்படத்தை நான் தயாரிக்கவில்லை. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு மற்றும் அவர்கள் காட்டும் அன்பு மட்டுமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது’ என நெகிழ்ச்சியுடனும் வருத்தத்துடன் கூறினார்.
