
நடிகர் நாக சைதன்யாவுக்கு யார் மீது என்ன கோபமோ?: நெட்டிசன்ஸ் விவாதம்..
‘உள்ளம் என்பது ஆமை.. அதில், உண்மை என்பது ஊமை’ என்ற பாட்டு வரிகளுக்கு ஏற்ப, நாகசைதன்யா கூறியவற்றை பார்ப்போம்..
சமந்தாவை பிரிந்த நாகசைதன்யாவும் சோபிதாவும் ஒருவரையொருவர் புரிந்து காதலித்து, இரு வீட்டார் சம்மதம் பெற்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று, பின்னர் ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் திருமணம் நடந்து முடிந்தது.
இந்தத் திருமண வாழ்க்கையிலாவது நாக சைதன்யா நிலைத்திருக்க வேண்டும் என்று சமந்தாவின் ரசிகர்களும், அவரது ரசிகர்களும் கமெண்ட்ஸ் செய்து வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
இந்நிலையில், நாக சைதன்யா தற்போது பேசியது, சிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருகிறது.
‘நான் சினிமா குடும்பத்திலிருந்து வந்தவன். ஆனால், எனக்கு சினிமாவில் நண்பர்கள் என்று யாரும் இல்லை. ராணா டகுபதி என்னை சிறு வயதிலிருந்தே பார்த்து வருகிறார். அவர் எனக்கு உறவினர். அதனால், அவர் நண்பர்கள் லிஸ்ட்டில் வரமாட்டார்’ என்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்களோ என்னது சைதன்யாவுக்கு நண்பர்களே இல்லையா? என கமெண்ட்ஸ் செய்தாலும், ‘யார் மீது இருந்த மனஸ்தாபத்தில், இப்படி மறைமுகமாக தாக்குகிறார்?’ எனவும் விவாதித்து வருகின்றனர்.
