முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 100 பேச்சாளர்கள் பங்கேற்பு!

அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஏற்பாட்டில், தமிழக முதல்வர் மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு “வாகைத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்” என்ற சிறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
“100 பேச்சாளர்கள் – 100 தலைப்புகள் – ஒரே தலைவர்” என்ற தனித்துவமான கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் முதல்வர் விஜய்யின் அரசியல் பயணம், மக்கள் நலப் பணிகள், தலைமைத்துவ பண்புகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து உரையாற்றினர்.
பள்ளிக் கல்வித்துறை, செய்தி, விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நடிகை ஜெயசித்ரா, இயக்குநர் வெங்கட் பிரபு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த வாழ்த்தரங்கம், அரசியல் மற்றும் கலைத்துறையினரின் பங்கேற்பால் சிறப்புப் பெற்றதுடன், பெரும் வரவேற்பையும் பெற்றது.
