தல தோனி பிரதமர் எனவும் தளபதி விஜய் முதல்வர் எனவும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dhoni And Vijay in Controversy Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை கோலமாவு கோகிலா டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தல-தளபதி இன்று புதிய கூட்டணி? : குஷியாய் ரசிகர்கள் வைரல் பதிவு..

பிரதமராகும் தல.. முதல்வராகும் தளபதி - மதுரையை அதிரவைத்த சர்ச்சை போஸ்டர்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையிலுள்ள கோகுலம் பிலிம்ஸ் ஸ்டுடியோஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தல தோனி தளபதி விஜய்யை நேரில் சந்தித்தார். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது மதுரையில் உள்ள ரசிகர்கள் விஜய் மற்றும் டோனியை வைத்து போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் தோனி பிரதமர் எனவும் தளபதி விஜய் முதல்வர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ‌‌

எனக்கு 274 Degree Celsius-ல “வயிறு எரியுது”…, கடுப்பான Vignesh Shivan..! 

இந்த போஸ்டர் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.