Harish Kalyan Movie
ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் தாராள பிரபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பிக் பாஸுக்கு பிறகு தொடர்ந்து நல்ல நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றியும் கொடுத்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது தாராள பிரபு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் கையில் ஐந்து குழந்தையுடன் இருக்கிறார்.

மேலும் பிரபு என்ற வார்த்தையில் விந்தணு போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதனால் இது அடல்ட் காமெடி படமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.