YouTube video

Vanitha  Vijayakumar Daughter About Mother Marriage : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார். மேலும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஏற்கனவே 2 திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற இவர் தற்போது மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார். வரும் ஜூன் 27ஆம் தேதி இவருக்கு தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் ஒருவரான பீட்டர் பால் என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

தற்போது வனிதாவின் திருமணம் குறித்து அவரின் மூத்த மகள் ஜோவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, எனக்கு உங்களைப் பற்றி நன்கு தெரியும். உங்களின் அன்பு, காதல் அனைத்தையும் நான் புரிந்து வைத்துள்ளேன். 15 வருடங்களாக உங்களுடன் இருக்கிறேன். காதலின் மீது யாருக்கும் அவ்வளவு நம்பிக்கை இருக்காது.

மேஜிக் வாழ்க்கை மீது நம்பிக்கை இருக்காது. ஆனால் உங்களுக்கு இருந்தது. உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என பதிவிட்டுள்ளார். வனிதாவின் திருமணத்திற்கு வாழ்த்து கூறி உள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.