‘இட்லி கடை’ படத்தில் அருண் விஜய்யுடன் தனுஷ் பாக்ஸிங்.?

தமிழ் திரையுலகின் பன்முகத் திறமையாளர் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் நடிக்கின்றார் என்பதை அறிவிக்க, படக்குழு ஒரு போஸ்ட்டரை வெளியிட்டது.
அந்த போஸ்டரின் மூலம், அருண் விஜய் பாக்ஸராக நடிக்கின்றார் என தெரிகின்றது. தற்போது இப்படத்திலிருந்து மேலும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதிலும் அருண் விஜய் பாக்ஸராக இருப்பதைப் போல காண்பிக்கப்படுகிறது. அருகே, தனுஷும் பாக்சிங் க்ளவுஸை போட்டுகொண்டு இருக்கின்றார்.
‘இட்லி கடை’ பட கிளைமாக்ஸ் காட்சியில் அருண் விஜய்யும் தனுஷும் பாக்ஸிங் செய்வதுபோல இருக்குமோ? என ரசிகர்கள் பேசி வருகின்றனர். தனுஷ், ‘இட்லி கடை’ வைத்திருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக பாக்சிங் கற்றுக்கொண்டு அருண் விஜய்யுடன் கிளைமாக்ஸ் காட்சியில் மோதுவார் என ரசிகர்களே ஒரு கதையை உருவாக்கிவிட்டனர்.
இந்த படம் கிராமத்து பீல் குட் படமாக மட்டும் இருக்காது. அதனுடன் ஸ்போர்ட்ஸ் ட்ராமா ஜானரையும் தனுஷ் கலந்திருப்பார் என்றே கூறப்படுகிறது. இதுவரை வெளியான போஸ்டர்களில் தனுஷ் பல கெட்டப்களில் வருகின்றார். இவை அனைத்தும் சேர்ந்து இப்படத்தின் கதைக்களத்தை ரசிகர்களால் கணிக்க முடியாத அளவிற்கு செய்துவிட்டது. அக்டோபர் 1-ந்தேதி ‘இட்லி கடை’ படம் வெளியாகின்றது. பொறுத்திருந்து ருசி பார்ப்போம்.
