விக்னேஷ் ராஜா-ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படங்களின் அப்டேட்ஸ்..

தனுஷின் (D54) ‘கர’ மற்றும் D55 படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
தனுஷ் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் D55-வது படமாக தயாராகவுள்ளது. இப்படத்தின் ஷூட் விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தை மதுரை அன்புச் செழியன் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சில காரணங்களால் இப்பட தயாரிப்பிலிருந்து வில விலகினார். பின்னர், மும்பையை சேர்ந்த நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
உடனடியாக நேரடி தமிழ் படத்தை தயாரிக்க அவர்களுக்கு பழக்கமில்லை என்பதால் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தனுஷே தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரிக்கவுள்ளார். அதன் பிறகு அப்படத்தை மும்பையை சேர்ந்த நிறுவனத்திற்கு கொடுப்பார் என கூறப்படுகிறது. இவ்வாறு D55 பட தயாரிப்பை தனுஷ் பெற்றிருப்பதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முன்னதாக, ரங்கூன் மற்றும் அமரன் என இயக்கிய இரண்டு படங்களையும் பெரும் வெற்றிப்படங்களாக கொடுத்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.
தனுஷ் தற்போது D54 என அழைக்கப்பட்டு வந்த ‘கர’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ‘கர’ படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
