கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைக்காக தனுஷ் கொடுத்த தொகை எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Dhanush Help to Sivashankar Master : தமிழ் சினிமாவில் நடிகராகவும் டான்ஸ் மாஸ்டராகவும் வலம் வந்தவர் சிவசங்கர் மாஸ்டர். இந்திய சினிமாவில் 800 படங்களுக்கு மேலாக இவர் நடனம் அமைத்துள்ளார். தற்போது 70 வயதுக்கும் மேலாக இவர் கொரோனாவால் குடும்பத்தோடு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதிலும் சிவசங்கர் மாஸ்டரின் நுரையீரல் பாதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மறைந்த சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைக்காக தனுஷ் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?? வெளியான தகவல்

மேலும் இவருக்கு ஒரு நாளைக்கு மருத்துவ செலவுக்கு 2.5 லட்சம் செலவாவதாக அவரது மகன்கள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் திரையுலக பிரபலங்களிடம் உதவியை கேட்டு இருந்த நிலையில் தனுஷ், சோனு சூட், சிரஞ்சீவி என பலர் உதவி வந்தனர். ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் : பாஜக வலியுறுத்தல்

மறைந்த சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சைக்காக தனுஷ் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?? வெளியான தகவல்

இந்த நிலையில் நடிகர் தனுஷ் சிவசங்கர் மாஸ்டர் அவர்களின் சிகிச்சைக்காக ரூபாய் 5 லட்சம் கொடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை கேட்ட தனுஷ் ரசிகர்கள் தனுசை பாராட்டி வருகின்றனர்.

Maanaadu படத்தை விமர்சனம் செய்த Sivakarthikeyan – இப்போ இதான் Trend | STR, Venkat Prabhu | HD