மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் சிவசங்கர் மாஸ்டருக்கு உதவியுள்ளார் நடிகர் தனுஷ்.

Dhanush Help to Siva Shankar Master : இந்திய திரையுலகின் பிரபல நடிகராகவும் டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் சிவசங்கர் மாஸ்டர். தமிழில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் பல்வேறு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் மன்மதராசா பாடலுக்கு நடனம் அமைத்தவர் இவர் தான்.

மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் சிவசங்கர் மாஸ்டருக்கு உதவிய தனுஷ் - வெளியான தகவல்

குடும்பத்தோடு ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் ரூபாய் செலவாகும் அவரது மகன்கள் தெரிவித்திருந்தனர். மேலும் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் திரையுலக பிரபலங்களிடம் அவர்கள் உதவி கேட்டு இருந்தனர்.

கனமழைக்கு வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள் : வானிலை மையம் தகவல்

மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் சிவசங்கர் மாஸ்டருக்கு உதவிய தனுஷ் - வெளியான தகவல்

இதனையடுத்து பாலிவுட் நடிகர் சோனு சூட் இவர்களுக்கு உதவ முன்வந்தார். மேலும் நடிகர் தனுஷின் சிவசங்கர் மாஸ்டர் நிதி உதவி இருப்பதாக தெலுங்கு திரையுலகை சார்ந்த மக்கள் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்ட SS.Rajamouli | #RRR Soul Anthem #Uyire | SS Rajamouli Speech about Uyire Song Launch

இதன் மூலம் தனக்கு ஹிட் பாடலை கொடுத்த மாஸ்டருக்கு நன்றி மறவாமல் உதவி செய்த தனுசை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.