ரொம்ப சந்தோஷம் அண்ணி: ஜஸ்வர்யாவுக்கு, தனுஷ் ரசிகர்களின் வைரல் பதிவு..
தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர். அது என்ன என பார்ப்போமா..
தனுஷூம், ஐஸ்வர்யாவும் விரும்பியபடியே விவாகரத்து கிடைத்து விட்டது. தனுஷை பிரிவதாக கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்த போதிலும் இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்வதை ஐஸ்வர்யா நிறுத்தவில்லை.
மேலும், தானும் தனுஷும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கவில்லை. இருந்தாலும், இன்ஸ்டாவில் தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கினார். பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்த உடனே இன்ஸ்டாகிராமில் அதிரடி மாற்றம் செய்வார்கள்.
இந்நிலையில், விவாகரத்து கிடைத்து இரண்டு நாளாகிய நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்ற தனுஷ் ரசிகர்களுக்கு ஒரே ஆச்சரியம்.
இன்ஸ்டாவில் தனுஷை அன்ஃபாலோ செய்யவில்லை ஐஸ்வர்யா. மேலும், ஜோடியாக எடுத்த புகைப்படங்களும் அப்படியே இருக்கிறது.
விவாகரத்து கிடைத்த கையோடு தனுஷ் அண்ணாவை அன்ஃபாலோ செய்து, அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை நீக்கிவிடுவீர்கள் என்று நினைத்தோம். எல்லாமே பழைபடி அப்படியே தான் இருக்கிறது. ரொம்ப சந்தோஷம் அண்ணி..’ என தெரிவித்துள்ளனர் தனுஷ் ரசிகர்கள்.
தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டாலும் மகன்கள் யாத்ரா, லிங்கா விஷயத்தில் சேர்ந்து தான் முடிவு செய்வார்கள். தனுஷும் சரி, ஐஸ்வர்யாவும் சரி வேலையில் சந்தோஷம் தேடி வருகிறார்கள்.
தனுஷ் ஒரு பக்கம் இயக்கம், நடிப்பு என பிசியாக இருக்கிறார். ஐஸ்வர்யாவோ புத்தகம் வாசிப்பது, சைக்கிளிங் செல்வது, கோவில்களுக்கு செல்வது, யோகா செய்வது, ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது என படுபிசியாக இருந்து வருகிறார்.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றிருக்கிறார்கள்.
‘தற்போதும் கூட ஒன்றும் பெரிதாக நடந்துவிடவில்லை. அந்த விவாகரத்து பத்திரத்தை கிழித்து போட்டுவிட்டு, மீண்டும் சேர்ந்து வாழுங்கள்’ என ஐஸ்வர்யாவிடம் தனுஷ் ரசிகர்கள் அன்புக் கோரிக்கையாய் கூறி வருகிறார்கள்.
ஆம்..மௌனராகம் படத்தில் கூட மேலே சொன்ன காட்சி வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும்; அது போல நிகழட்டும்.!