தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு, இயக்குனர் அட்லி வரவேற்பு..

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்படத்தில், சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, தமன் இசையமைக்கிறார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகின்றது. இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரி ஒன்றைப் போட்டுள்ளார்.
அதாவது, முதன் முதலாக படம் இயக்கும் ஜேசனை வரவேற்று, வாழ்த்திப் பதிவிட்டிருக் கிறார். (இருக்காதா பின்னே..) தற்போது, அந்த பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
விஜய்க்கு ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குனராக மட்டுமல்லாமல், அவரின் தம்பியின் ஸ்தானத்தில் உள்ளார் இயக்குனர் அட்லி.
தமிழ்த்திரையிலிருந்து குறுகிய காலத்திலேயே பாலிவுட் பறந்து படம் இயக்கி 1000 கோடி ரூபாய் கலெக்ஷன் பார்த்தவர் அட்லி மட்டுமே. அதாங்க.. ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ படம்.!
இச்சூழலில், ஜேசன் இயக்கத்தில் நடிக்கும் சந்தீப் கிஷன், இப்படத்தை பற்றி மிகவும் உயர்வாகவும் பாஸிட்டிவாகவும் பேசியுள்ளார். ஆக்சன் என்டர்டைனராக இப்படம் உருவாக இருப்பதாக தெரிவித்த சந்தீப் கிஷன், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஜேசன் சஞ்சய் தனக்கு கதை கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவரின் முதல் படத்தில் ஹீரோவாக நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தளபதி விஜய்யின் மகன் என்பதால், ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமும் ஆவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, தாத்தா எஸ்ஏசியின் எமோஷன் பாணியில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் அப்பா பாதையில் கதாநாயகனாக வலம் வர இருக்கிறார் என்றே தோன்றுகிறது. எப்படியோ, நன்றே செய்க, அதை இன்றே செய்க.!
