தனுஷ் நடிப்பில் வெளியான ‘குபேரா’ டீசர் எப்டி இருக்கு?
தனுஷ் நடித்த ‘குபேரா’ டீசர் பற்றிப் பார்ப்போம்..
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள ‘குபேரா’ படம் ஜுன் 20-ந்தேதி ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘எனது எனது’ பாடல் பின்னணியில் ஒலிப்பதுடன் தொடங்கும் டீசர், படத்தின் சீரியஸ் பக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. நாகர்ஜூனா, இந்தி நடிகர் ஜிம் சர்ப் தொடர்பான காட்சிகளுடன் தொடங்குகிறது.
வித்தியாசமான தோற்றத்தில் தனுஷ் நடித்துள்ளார் என்பது தெளிவாகிறது. அதுபோல நாகார்ஜுனாவும் புதிய தோற்றத்தில் ஈர்க்கிறார். இவர்களின் நடிப்பு வசீகரிக்கிறது.
ராஷ்மிகா ஒரு காட்சியில் வந்து செல்கிறார். டீசர் முழுவதும் சீரியஸ் பிரதிபலிக்கிறது. ஆனால் ரத்தம், துப்பாக்கி, கொலை என கொடூர வன்முறை தெரியவில்லை.
படத்தில் உணர்வுபூர்வமாக கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் எப்டின்னு.. இந்த பான் இந்தியா படத்தை.!
