என்ன வேணும் உனக்கு?: திரிஷாவின் கேள்விக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்..

‘தக் லைஃப்’ பட புரொமோஷன் பரபரக்கும் நிலையில், சுகர் பேபி திரிஷாவின் ஹாட்டான டுவிட் பார்ப்போம்..
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ ஜுன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக திரிஷாவுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட ‘சுகர் பேபி’ பாடலில் வரும் ‘என்ன வேணும் உனக்கு’ வரிகளை தற்போது டுவிட்டாக போட்டு ரசிகர்களின் கவனத்தை மொத்தமாக கவர்ந்துள்ளார் திரிஷா. இப்படியொரு டுவிட்டை பார்த்துமே ரசிகர்கள், ‘நீ தான் வேணும் எனக்கு’ என்றும் ‘கட்டிக்கிறியா’ என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
‘எப்போதுமே இப்படியே ஹேப்பியாக இருக்க வேண்டும்’ எனவும் வடிவேலுவின் காமெடியை வைத்து ஏற்கனவே ஏகப்பட்ட வீடியோ மீம்கள் ‘சுகர் பேபி’ பாடலை ட்ரோல் செய்து வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவையும் திரிஷா டுவிட்டுக்கு கமெண்ட்டாக போட்டுள்ளனர்.
‘பிராந்தி ஒரு ஃபுல்லு, பீரு ஒரு ஃபுல்லு’ என வடிவேலு போடும் லிஸ்ட்டை போட்டு, சில கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர் தீவிர ரசிகர்கள். ‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்த நிலையில் ‘லியோ 2′ அப்டேட் மட்டும் வாங்கிக் கொடு தலைவி’ எனவும் கமெண்ட் போட்டு வருவது தொடர்கிறது.
