ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி என்பது போல தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush About Jagame Thandiram Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் இணையதளம் வழியாக வெளியாக உள்ளது.

இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ட்விட்டர் ஸ்பேஸ் பக்கத்தில் உரையாடினார்கள்.

அப்போது நடிகர் தனுஷ் எனக்கு சிறிய கதாபாத்திரம் மிகவும் பிடித்துள்ளது. ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸுக்காக தான் காத்திருந்தோம். தற்போது இப்படம் மக்களிடம் போய்ச் சேரப் போகிறது என நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வரை கார்த்திக் சுப்பராஜ் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். அந்த அளவிற்கு எனக்கு சுருளி கதாபாத்திரம் பிடித்துள்ளது.

என்னுடைய ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும் என கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களுக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் பிடித்த ஒன்றாக இருக்கும் என நடிகர் தனுஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.