Dhanush Suruli Release Date
தல அஜித் பிறந்த நாள் அன்று தனுஷ் ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படமும் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. சுருளி என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் படக்குழு இன்னும் இதனை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் தற்போது இப்படத்தை படக்குழு மே 1-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மே 1 தான் தல அஜித்தின் பிறந்த நாள் என்பது கூடுதல் சிறப்பு