Darbar Villiain

Darbar Villian : தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக எமி ஜாக்சனின் முன்னாள் காதலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வில்லன் குறித்த தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. பாலிவுட் நடிகரும் சுஸ்மிதா பட்டேல், ராஜ் பப்பர் தம்பதியின் மகனான பிரதீப் பப்பர் தான் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம்.

இது குறித்து பிரதீப் கூறியதாவது, ரஜினி போன்ற சகாப்த நடிகர்களுடன் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறேன். தர்பார் படத்தில் என்னுடைய 200% உழைப்பை கொட்டி நடிப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் இவரும் எமி ஜாக்சனும் சில வருடங்களுக்கு முன்பு தீவிரமாக காதலித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Darbar Villian

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.