Darbar First Half Review
தர்பார் படத்தின் முதல் பாதி விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள தர்பார் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் bad COP-ஆக வந்து ஒரு அரசியல் வாதியின் மகளை காப்பாற்றுகிறார், அதுவரை நிதானமாக சென்று கொண்டிருந்த தர்பார் சூடு பிடிக்கிறது.

யோகி பாபு முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பதால் சும்மா தெறிக்க விட்டுள்ளார், முதல் பாதியில் பல இடங்களில் வந்து செல்கிறார். வரும் போதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார்.

முதல் பாதியில் நயன்தாரா அழகாக வந்து செல்கிறார், அவருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை, இரண்டாம் பாதியில் அவர் பங்கிற்கு பிச்சு உதறுவார் என எதிர்பார்க்கலாம்.

வில்லனாக நடித்துள்ள சுனில் ஷெட்டிக்கும் முதல் பாதியில் பெருசா வேலை இல்ல, இரண்டாம் பாதியில் வெய்ட் காட்டுவாரா என பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பேட்டை படத்தை விட இந்த படத்தில் இன்னும் மாஸாக வெறித்தனமாக நடித்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் கொடுத்துள்ளார்.

படக்குழு கூறியபடியே இடைவேளை காட்சி அனல் பறக்கிறது. அனிருத் BGM வேற லெவல். சந்தோஷ் சிவனின் DOP பக்கா மாஸ்.

முருகதாஸ் ஒவ்வொரு காட்சியையும் ரஜினி ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார். மொத்தத்தில் தர்பார் முதல் பாதி ரசிகர்களுக்கு செம என்ஜாய்மென்ட்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.