Darbar
தர்பார் பட வியாபாரத்திற்காக லைகா செய்து வரும் செயல்களால் ரஜினிகாந்த் கடுப்பாகி விட்டதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தர்பார் திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் படத்தின் டப்பிங் எல்லாம் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கியுள்ளது. பேட்ட படம் தயாரிப்பாளருக்கு நல்ல ஷேர் கொடுத்ததால் இந்த படத்தை வாங்குவதற்கு கடும் போட்டா போட்டி நிலவி வருகிறதாம்.

இதனால் லைகா நிறுவனம் படத்தின் விலையை ரூ 70 முதல் 80 கோடி வரை கூறுகிறதாம், ஆனால் விநியோகிஸ்தர்கள் ரூ 60 கோடிக்கு மேல் வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். இருந்தாலும் லைகா நிறுவனம் விலையை குறைக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதனையறிந்த ரஜினிகாந்த் எதுக்கு உங்களுக்கு இந்த பேராசை.? நீங்க இப்படி செய்யறதால எனக்கும் தான் கெட்ட பெயர் என கோபப்பட்டதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம், ஆர். ஜே மீடியா கிரியேஷன் குமரேஷ் குமார் இந்த படத்தை வாங்க போட்டா போட்டி வருவதாகவும் தெரிகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.