nellai
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவும் வேட்பாளராக போட்டியிட்டனர்.

Court order re-election for postal votes in radhapuram – இதில், இன்பதுரை 69, 590 வாக்குகளும், அப்பாவு 69,541 வாக்குகள் பெற்றிருந்தனர். இதன் அடிப்படையில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பருவ வயதை அடைந்த பெண்களும் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய உணவுகளைப் பார்ப்போமா?

ஆனால், வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகள் எண்ணப்படவில்லை  எனவும் 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் திமுக அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அப்பாவு கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் அக்டோபர் 4ம் தேதி 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் தபால் வாக்குகளுக்கு மட்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.