சூர்யா ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Court Order Against Suriya : தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். படத்தை ஞானவேல் இயக்க சூர்யா தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் இருளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் லாக்கப் டெத் செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கியிருந்தனர்.

சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு.. வெளியான அதிர்ச்சித் தகவல்

ஆனால் உண்மையில் லாக்கப் டெத் செய்தவர் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் அல்ல அப்படி இருக்கையில் இந்த படத்தை வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் செய்தது போல தவறாக சித்தரித்து விட்டனர். மேலும் போலீசார் வீட்டில் வன்னியர் சின்னமான அக்னி கலசம் இடம் பெற்றிருந்தது.

இந்தி பேசும் வட மாநிலத்தவரை அறைந்து கலவரத்தை உண்டு பண்ணும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன என படத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் வன்னியர் சமூகத்தினர் சூர்யாவை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு.. வெளியான அதிர்ச்சித் தகவல்

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சூர்யா ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.