குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது என தகவல் வெளியாகியுள்ளது.

Cook With Comali 3 Update : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. ‌ இதுவரை இந்த நிகழ்ச்சி 2 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இவை இரண்டுமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. பிரம்மாண்ட நிகழ்ச்சி ஆக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது.

இந்த நிலையில் தற்போது விரைவில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதில் கோமாளிகளாக இரண்டாவது சீசனில் பங்கேற்றவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். அதுமட்டுமல்லாமல் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் இருந்து ஒரு கோமாளியும் குரோஸியும் கூடுதல் கோமாளிகளாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து ரசிகர்களும் இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ஆவலோடு காத்துக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.