CM EPS Activities in Tamilnadu Political

அசரவைக்கும் திட்டங்களால் அனைவரையும் கவர்ந்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

CM EPS Activities in Tamilnadu Political : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர்களது ஆட்சியின் பதவிக்காலம் முடிந்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கினார்.

இவருடைய திட்டங்கள் பெரும்பாலான மக்களை கவர்ந்து வருகிறது எனக் கூறலாம்.

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் என்ற திட்டம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சாதாரண ஜுரம் சளி என்றால் கூட கிளினிக் சென்றால் ஒரு நாளைக்கு ரூபாய் 200 வரை செலவு ஏற்படும். ஏழை எளிய மக்களுக்கு அந்த செலவு கூட இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளார் தமிழக முதல்வர்.

அதேபோல் பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவீத இட ஒதுக்கீடு என்ற சட்ட மசோதாவுக்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த இட ஒதுக்கீடு மூலமாக தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற 435 மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயில முடியும். அதுமட்டுமில்லாமல் இவர்களின் கல்விச் செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் மூலமாக தமிழக ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்த நிலையை முதல்வர் பழனிசாமி மாற்றி அமைத்துள்ளார்.

கொரானா வைரஸ் தொற்று காரணமாக உலகமே பொருளாதார இழப்பீட்டை சந்தித்துவரும் நிலையில் தமிழகத்தில் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அதற்குக் காரணம் முதல்வர் பழனிசாமி அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் தான். இதன் மூலம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி கிடுகிடுவென உயரும்.

பரவிவரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக பெரும்பாலான மக்கள் பெரிய அளவில் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதல்வர் பழனிசாமி பொங்கல் பரிசாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூபாய் 2500 மற்றும் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முந்திரி திராட்சை போன்ற இலவச பொருட்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

விவசாயத்தைப் பொறுத்தவரை அத்திக்கடவு அவினாசி திட்டம் மூலமாக பெரும்பாலான ஏரிகளை தூர்வாரி மழைநீரை சேகரிக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளனர். இதனால் எக்கச்சக்கமான விளை நிலங்கள் பயன்பெறும். தமிழகத்தில் நெல் மகசூல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பல மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல் முழு ஊரடங்கு தளர்த்தப் பட்டவுடன் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வுகளை நடத்தி மாவட்டத்திற்கான நல்ல திட்டங்களை செயல்படுத்தினார் தமிழக முதல்வர். இந்த கொரானா பேரிடர் காலத்திலும் தமிழகம் முழுவதும் சுற்றிய ஒரே அரசியல் தலைவர் என்ற பெயரும் முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்துள்ளது.

இது போன்று பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏழை எளிய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் எனலாம்.