அஜித்துடன் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு..

Web Ads

அஜித்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் படம் உருவாகுமா? இது பற்றி சித்ரா லட்சுமணன், அஜித் மற்றும் லோகேஷ் கனகராஜ் இடையே மீட்டிங் நடந்ததும், படம் பண்ணுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மை தான். சந்திப்பு தொடர்பாக அஜித் பாசிட்டிவாக சொன்னதாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் அஜித்திற்காக கதையை தயார் செய்யும் பணியில் இறங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘டிசி’ என்ற படத்தில் லோகேஷ் ஹீரோவாக நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து, கார்த்தி நடிப்பில் ‘கைதி-2’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கார்த்தி அடுத்தடுத்து பிசியாக பல படங்களில் நடித்து வருவதால் ‘கைதி-2’ படம் மேலும் தாமதமாகலாம் எனவும் சொல்லப்படுகிறது. அஜித் படமும் தயாரிப்பு நிறுவனமும் உறுதியானால் லோகேஷின் லைன் அப்பில் மாற்றம் வரலாம் என தெரிகின்றது.

இந்நிலையில் அஜித்தின் ‘AK64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கும் எனவும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!

chithra lakshmanan about ajith and lokesh kanagaraj meeting
chithra lakshmanan about ajith and lokesh kanagaraj meeting