Chinmayi And VairaMuthu

வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துவிட்டு அவர் பாடலையே பாடிய சின்மயியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மீ டூ என்ற அமைப்பின் மூலமாக தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை பற்றி தைரியமாக பேசி வருகின்றனர்.

தமிழ் திரை உலகிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாக பாடகி சின்மயி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

மேலும் கவிஞர் வைரமுத்து மீதும் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து இருக்கிறார். அவரை தொடர்ந்து பல பெண்கள் வைரமுத்து மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சின்மயி, மேடையில் வைரமுத்து எழுதிய பாடலை பாடியுள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் வைரமுத்து மீது குற்றம் சாட்டிய நீங்கள் அவர் பாடலை ஏன் பாடுகிறீர்கள்? அப்போ நீங்கள் கொடுத்த புகார் எல்லாம் உண்மையா? பொய்யா? என குழப்பத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு சின்மயி என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.