
திரையில் பார்க்கும் சூர்யா நிஜம் இல்லை என முகத்திரையை கிழித்து உள்ளார் விமர்சகர் செய்யாறு பாலு.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் இருப்பவர் சூர்யா. படங்களில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையில் அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையின் மூலமாக குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறார்.

அதேபோல் ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்களில் ஏழை மக்களுக்காக வசனம் பேசி இருந்தார். இப்படி திரையில் பார்க்கும் சூர்யா விஜய் சூர்யா கிடையாது என செய்யாறு பாலு பேசியுள்ளார்.
இவர் அளித்த பேட்டி ஒன்றில் சூர்யா கீழடியில் எல்லோரையும் காக்க வைத்து விட்டு குடும்பத்துடன் சென்று உள்ளே சுற்றி பார்த்துவிட்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்ட விஷயம் பற்றி விமர்சனம் செய்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விட்டு மும்பையில் குடும்பத்தோடு குடியேறி குழந்தைகளை அங்கு படிக்க வைப்பது பற்றியும் விமர்சனம் செய்துள்ளார். மேலும் ஒரு முறை மும்பை ஏர்போர்ட் தன்னுடைய பிள்ளைகளை போட்டோ எடுக்க வேண்டாம் என பத்திரிக்கையாளர்களை எச்சரித்த சூர்யா கீழடியில் மட்டும் குடும்பமாக போட்டோ எடுத்துக் கொண்டதையும் விமர்சனம் செய்துள்ளார்.

இப்படி திரையில் பார்க்கும் ஹீரோக்கள் யாரும் நிஜத்திலும் அப்படியே இருப்பதில்லை என விமர்சித்துள்ளார் செய்யாறு பாலு.