Chennai28 Team in Maanaadu

மாநாடு படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவல் ஒன்று புகைப்படத்துடன் வெளியாகி உள்ளது.

Chennai28 Team in Maanaadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது வெற்றிகரமாக படப்பிடிப்புகளை நடத்தி வருகிறது.

படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். மேலும் எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படங்களில் நடித்து அந்த கூட்டணி அப்படியே மாநாடு படத்தில் இணைந்து இருப்பது போல தெரிகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் பாண்டிச்சேரியில் நடந்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் அரவிந்த் ஆகாஷ் கலந்து கொண்டுள்ளார்.

அவர் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்ததன் மூலம் இந்த தகவல் உறுதியாகியுள்ளது.

சென்னை 28 படத்தில் நடிப்பவர்கள் மாநாடு படத்தில் நடிப்பதால் கொண்டாட்டத்திற்கு நிச்சயம் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.