நடிகர் லாரன்ஸ் நடித்துவரும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி ஹீரோவாகவும் நடன இயக்குனராகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது பி வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் லாரன்ஸ் உடன் இணைந்து வைகை புயல் வடிவேலு, மனோபாலா, ராதிகா சரத்குமார் போன்ற பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். பெரிய எதிர்பார்ப்போடு உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முன்னதாகக் தொடங்கி நடைபெற்று வருகிறது.

லாரன்ஸின் சந்திரமுகி 2… கலக்கலான ஷூட்டிங் புகைப்படங்கள் வைரல்!.

இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு, ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், மனோபாலா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை மனோபாலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதுவும் தற்போது வைரலாகி வருகிறத