Central Government Exam Update
Central Government Exam Update

Central Government Exam Update : மத்திய அரசின் பல்வேறு பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரே பொதுத்தேர்வை நடத்துவதற்கு “ தேசிய பணியாளர் நியமன தேர்வு முகமை’ என்ற அமைப்பு ரூ. 1,517 கோடியில் புதிதாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு பணிக்கான தேர்வுகளை தற்போது வெவ்வேறு அமைப்புகள் நடத்தி வருகின்றன. இதனால் தேர்வு எழுதும் இளைஞர்களின் நேரமும் பணமும் விரையம் ஆகிறது.

இந்தக் குறையை நிவர்த்தி செய்து அனைத்து போட்டித் தேர்வுகளையும் நடத்த தேசிய அளவில் ஒரு அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்த அமைப்பு தேசிய பணியாளர் நியமன தேர்வு முகாம் என்ற பெயரில் இயங்கும். அதன் தலைவராக மத்திய அரசின் செயலுக்கு நிகரான தகுதியுடையவர் நியமிக்கப்படுவர். இந்த அமைப்பு உருவாக்குவதற்காக ரூ. 1,517 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

அந்த அமைப்பில் ரயில்வே அமைச்சகம், பணியாளர் தேர்வாணையம் SSC, ரயில்வே தேர்வு வாரியம் RRB, வங்கிப் பணியாளர் தேர்வாணையம் IBPS ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் குரூப் பி, குரூப் சி (தொழில் நுட்பம் சாராத பணிகளுக்கு) பணியிடங்களுக்கு தகுதியானவர்களை இந்த அமைப்பு தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கும்.

இந்த மூன்று துறைகளுடன் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாநில அரசு, யூனியன் பிரதேசங்கள், அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை சேர்வதற்கான இந்த பயன்படும்.

இந்த அமைப்பானது கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அமையும். மேலும் பணி நியமன நடைமுறையில் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்படும் என்றும், இந்த தேசிய தேர்வுகள் முகமை அமைப்பால் கிராமப்புற இளைஞர்களும் பெண்களும் அதிகம் பயனடைவர் என்று மோடி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.