Vivekh

மாபெரும் கலைஞனே மனம் உடைந்து போனேன் என விவேக் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Celebrities Condolence to Vivekh Death : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட கலைஞர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக சீர்திருத்தக் கருத்துக்களை காமெடியாக சொல்வதில் கைதேர்ந்தவர்.

இவர் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு விவேக்கின் உயிர் பிரிந்தது. இவருடைய மனைவி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாபெரும் கலைஞனே மனம் உடைந்து போனேன் என குறிப்பிட்டுள்ளார்.

நம்ப முடியவில்லை.. இதயம் உடைந்துவிட்டது. இளமையானவர், திறமையானவர் என விவேக்கின் மறைவு குறித்து சுகாசினி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் இறப்பு தமிழ் சினிமாவிற்கு மட்டும் இழப்பல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு. அவர் சமூகத்திற்கு பெரிய பெரிய வேலைகளை அவருடைய பெயரில் என்னால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து செய்வேன் என குறிப்பிட்டு தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

நம்ப முடியவில்லை மனம் உடைந்து விட்டது.. சமூகம் சார்ந்த உங்களது கருத்துக்களை எப்போதும் உங்களது நினைவை எங்களுக்கும் வைத்திருக்கும் என தெரிவித்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சினிமாவிற்காகவும் சமுதாயத்திற்காகவும் கடுமையாக உழைத்தவர். அவர் தமது என் மனதில் நீண்டநாள் வாழ்வார் எனக்கூறி இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் பிரசன்னா.

RIP விவேக் சார் மனம் உடைந்து விட்டது என இரங்கல் தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்.. விவேக் சார் உயிரிழந்ததை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நாள் அனைவருக்கும் கருப்பு தினம். நான் ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன். தமிழ் சினிமா நல்ல மகனை இழந்து விட்டது. நம் நாடு ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டது என்று கூறி வருத்தப்பட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

விவேக் அவர்களின் மறைவிற்கு பேரதிர்ச்சி.. சொல்வதற்கு வார்த்தையே இல்லை என பதிவிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன். கௌதம் கார்த்திக், நந்திதா ஸ்வேதா என இன்னும் பல திரையுலக பிரபலங்கள் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.