Captain Vijayakanth

Captain Vijayakanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கேப்டன் விஜயகாந்த்தை சந்திக்க இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தற்போது உடல் நல குறைபாடு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று விட்டு சமீபத்தில் வீடு திரும்பி இருந்தார்.

இதனையடுத்து திமுக அதிமுக என இரண்டு கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை இழுபறியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை 11 மணிக்கு கேப்டன் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார். உடல் நலம் குறித்து விசாரிக்க தான் சந்திக்க உள்ளார்.

இருந்தாலும் அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.