Bigil Poster creates Record :
Bigil Poster creates Record : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.
இதனாலேயே இந்த போஸ்டரும் பிகில் என்ற ஹேஷ் டாக்கும் வைரலாகியது. இதன் உச்சமாக இந்த ஹேஷ் டாக்கில் 2 மில்லியன் டிவீட் தற்போது வரை பதிவாகி உள்ளதாம்.
இது மிகப்பெரிய சாதனையாகும். இப்படி படம் ரிலீசுக்கு முன்பே சாதனையை நிகழ்த்தியுள்ளது பிகில்.