சங்கர் இயக்கும் புதிய படத்தில் இரண்டு பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் வேள்பாரி என்ற நாவலை இயக்க முடிவெடுத்துள்ளதாகவும் இதற்கான உரிமையை சங்கர் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிக்க விக்ரம் மற்றும் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது. சங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது ஆனால் இது மிகவும் பிரம்மாண்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.