கார்ஜியஸ் லுக்கில் சமந்தா புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் பிரபலமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், கத்தி,10 எண்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா சமீபத்தில் அவரது அண்ணன் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இது மட்டும் இல்லாமல் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது கார்ஜியஸ் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.