செழியன் குடித்துவிட்டு வீட்டுக்கு வர பாக்யா கோபமாகியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். கிச்சனுக்கு தண்ணீர் குடிக்க செல்ல பாக்யா சாப்பாடு எடுத்து வைக்கிறார். சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி கிளம்பும்போது பாக்கியா குடிச்சிருக்கியா செழியா என்று கண்டுபிடிக்கிறார். கார் எங்க விட்ட சத்தமே கேக்கல என்று கேட்க ஆபீஸ்லயே இருக்கு பிரண்டு டிராப் பண்ணா என்று சொல்லுகிறார். என்னாச்சு என்ன பிரச்சனை என்று கேட்க எதுக்குமா இப்ப கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்க என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி மேலே வருகிறார்.
பாப்பா தூங்கிக் கொண்டிருக்க ஜெனி உன்னோட பாப்பாவும் வயித்துல இருக்குற பாப்பாவும் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டாங்க ஒரு ஹக் குடுத்துட்டு போ என சொல்லுகிறார். முதலில் மறுக்கும் செழியன் பிறகு கட்டிப்பிடிக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து ஜெனியும் குடித்து இருப்பதை கண்டுபிடிக்கிறார். ஆபீஸ்ல பிரச்சனைன்னு சொன்ன இப்ப குடிச்சிட்டு வந்திருக்க என்ன ஆச்சு என்று கேட்க, நீயும் அம்மா மாதிரி கேள்வி கேட்காத ஒரு பீர் குடிக்கிறதுல இவ்ளோ பிரச்சனையா என்று கேட்கிறார். பாவம் ஆன்ட்டி இதை நினைச்சு பீல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க என்று சொல்ல, எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு அதுக்கெல்லாம் நான் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா என்று கேள்வி கேட்க உன்னோட பிரச்சனையை நீ அவங்க கிட்ட சொன்னியா அப்புறம் எப்படி அவங்களுக்கு தெரியும் என்று ஜெனி கேட்கிறார். இப்போ உனக்கு பிரச்சனை ஆன்டி குடிச்சத கண்டுபிடிச்சது தானே என்று சொல்லிவிட செழியன் குளிக்க சென்று விடுகிறார்.
கோபி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க ராதிகா இன்னொரு இட்லி சாப்பிடுங்க கோபி என்று எடுத்து வைக்கிறார் இல்ல ராதிகா ஏற்கனவே செந்தில மீட் பண்ணி வாட்டர் மெலன் ஜூஸ் குடிச்சிட்டேன் உனக்காக தான் சாப்பிடுறேன் என்று சொல்ல, குடிக்காம வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் கோபி என்று ராதிகா சொல்லுகிறார். நீயே இதெல்லாம் கேக்குற என்று சொல்ல ஆனால் செய்யணும் பார்ல பார்த்தேன் அவன் குடிச்சிருந்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது என்ன ஆச்சு என்று கேட்க ஆபீஸ்ல பிரச்சனை என்று சொன்னதாக சொல்லுகிறார். உடனே கோபி பாக்யாவை திட்ட அதற்கு ராதிகா, உங்களுக்கு ஒரு பிரச்சனைனா நீங்க யார்கிட்ட போய் சொல்லுவீங்க உங்க அம்மா கிட்ட சொல்லுவீங்களா என்று கேட்க நானே தான் சால்வ் பண்ணுவேன் என்று சொல்லுகிறார். அப்படித்தானே ஆகணும் அவளுக்கும் ஒரு வயசாயிடுச்சு இந்த வயசுல அவங்களுக்கான பிரச்சனையே அவங்களை தீர்த்துக்கிற அளவுக்கு வளர்ந்து இருக்காங்க அப்படி இருக்கும்போது எல்லா இடத்திலும் பாக்கியதான் வந்து பாக்கணும்னு அவசியம் இல்லையே என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். அவங்க உங்கள மாதிரி குடிக்க சொல்லலையே என்று சொல்ல நான் குடிக்க சொல்லல அவன் குடிச்சுக்கிட்டு இருந்தா நான் ஹெல்த் ஸ்பாயில் ஆயிடும் வேணான்னு தான் தடுத்தேன் என்று கோபி சொல்லுகிறார். நீ உன் பிரண்டுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ என்று சொல்ல நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணல நான் நியாயத்தை தான் சொன்னேன் என்று சொல்லிவிட்டு எழுந்து செல்ல கோபி புலம்புகிறார்.
இனியாவை காலேஜுக்கு ஈஸ்வரி ஆட்டோவில் கூட்டிப் போக செல்வி நானும் கூட வரட்டும்மா அம்மா என்று கேட்க, ஈஸ்வரி நீ வேற எதுக்கு நானே போயிட்டு வரேன் என்று சொல்லி கிளம்புகிறார். உடனே பக்கத்து வீட்டுக்காரர் இரண்டு பேர் வந்து எழில் போன் பண்றானா என்று பாக்கியாவிடம் கேட்க டெய்லியும் பண்றா என்று சொல்லுகிறார். குருவிக்கூடு மாதிரி இருக்கிற வீட்ல இருக்கிறத கேள்விப்பட்டோம் என்று கேட்க நீ ஏன் எழிலை வீட்டை விட்டு துரத்திட்ட என்று பாக்யாவிடம் கேட்கின்றனர். நான் அவன வீட்ட விட்டு எல்லாம் துரத்துல இப்போதைக்கு அவன் தனியா இருப்பது தான் நல்லது என்று அனுப்பி இருக்க என்று விளக்கம் கொடுக்கிறார். உடனே உங்க மாமியார் வெளியே போறாங்க என்று கேட்க அதுல என்ன இருக்கு என்று பாக்கியா கேட்கிறார் எப்பவுமே புருஷன் இறந்து ஒரு வருஷத்துக்கு வெளிய வர மாட்டாங்க ஆனா இவங்க வெளிய போறதுக்குனே போற மாதிரி இருக்கு என்று சொல்ல செல்வி கோபப்படுகிறார். உடனே பாக்யா அவங்க வீட்ல இருந்தா மாமாவையே நினைச்சுகிட்டு அழறாங்க, அதனால நான் தான் அனுப்பி வெச்சேன் என்று சொல்ல அவங்க மேலும் பேச எங்களுக்கு வேலை இருக்கு என்று உள்ளே வந்து விடுகின்றனர். விட்டிருந்தா நான் பேசி இருப்பேன் இல்லக்கா என்று செல்வி சொல்ல இன்னொரு தடவை பேசுனா பாத்துக்கலாம் நீ வா என்று பாக்கியா கூப்பிட்டு செல்கிறார்.
மறுநாள் காலையில் செழியன் பற்றி பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வருகிறார். பாக்யாவிடம் குட் மார்னிங் சொல்ல அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். காபி கேட்க கேட்டவுடன் பாக்யா எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க ஜெனி ஜாகிங் போலயா என்று கேட்கிறார் போல டயர்டா இருக்கு என்று சொல்லுகிறார்.
பாக்கியா செழியன் இடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு செழியனின் பதில் என்ன என்பதை இன்றே எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.