சன் டிவி சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாக வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். டிஆர்பி யில் சன் டிவியின் பல சீரியல்கள் முன்னே இருந்தாலும் ,இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.
அந்த வகையில் ஏற்கனவே இனியா முடிவுக்கு வரப் போவதாக தகவல் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து ஏழு மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியலும் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டும் இல்லாமல் மிஸ்டர் மனைவி,மலர்,ஆனந்த ராகம் போன்ற சீரியல்களும் முடிவுக்கு வரப்போவதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் சன் டிவி சீரியல் ரசிகர்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.