பான் இந்தியா இயக்குனருடன் அஜித் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பான் இந்தியா இயக்குனரான பிரசாந்த் நீல் அஜித்திடம் கதை கூறியதாகவும்,அதற்கு அவர் ஓகே சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஹம்பாலே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் அஜித்தை பான் இந்தியா ஸ்டாராக பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.