நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் நடித்துள்ள பிகில் டிரெய்லர் வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த டிரெய்லரை பாராட்டி திரையுலகில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய சில கருத்துகள் ஆளும் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதோடு, பிகில் திரைப்படம் தணிக்கை சான்றிதழை பெறாமல் இருந்தது. எனவே, அப்படத்தை வெளியிட சில தடைகள் வர வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், தற்போது பிகில் படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை அளித்துவிட்டது. எனவே, கூறிய படி எந்த சிக்கலும் இல்லாமல் தீபாவளி அன்று பிகில் திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.