Bigil
பிகில் திரைப்படம் ஷாருக்கான் படத்தின் ரீமேக் என பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் உலகம் முழுவதும் இந்த தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்க உள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் ட்ரைலரின் அறிமுக காட்சியை வைத்து சிலர் பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சக் டே இந்தியா படத்தின் ரீமேக் படம் இது என பேச தொடங்கினர்.

மேலும் இதற்காக அதிகாரபூர்வ ரீமேக் உரிமையும் பிகில் படக்குழு பெற்றிருப்பதாக தகவல்கள் வைரலாக இது குறித்து அர்ச்சனா கல்பாத்தி விளக்கமளித்துள்ளார்.

அதாவது பிகில் திரைப்படம் சக் டே இந்தியா படத்தின் ரீமேக் இல்லை, அதற்காக ரீமேக் உரிமையையும் நாங்கள் வாங்கவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள் என கூறியுள்ளார்.