தொடங்கியவுடன் நடக்கும் எவிக்ஷன்.. போட்டியாளர்கள் அதிர்ச்சி..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

Web Ads

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

biggbosstamil 8 day 69 promo2

biggbosstamil 8 day 69 promo2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வீட்ல இருக்கிறவங்க இதை பண்ணுங்க சரி என்றும், இதை பண்ணாதீங்க தவறு என்றும் சொன்னாள் சரி என்று சொன்னதை கொண்டாடியதை விட தவறு என்று சொன்னதை தான் அதிகமாக செய்கிறார்கள். கேட்டா எது தான் நான்னு சொல்றாங்க விசாரிச்சுடுவோம் என்று விஜய் சேதுபதி சொல்லி இருக்கிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் இன்று தொடக்கமே எவிக்ஷனோடு தொடங்கப் போகிறது என்று விஜய் சேதுபதி சொல்லுகிறார் இது மட்டும் இல்லாமல் மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லுகிறார். இதனால் யார் அந்த நபர் என்று போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)