மனைவியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிக் பாஸ் ரவீந்தர் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து..!
மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பிக் பாஸ் ரவீந்தர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக பிரபலமானவர் ரவீந்தர். இவர் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
இந்நிலையில் தன் காதல் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகாலஷ்மி ரவீந்தர் பிரம்மன் கற்பனை மொத்தத்தில் தீர்ந்தது உன்னை அழகாக இந்த பூமியில் படைக்க இனி ஒன்று வேண்டும் என்றால் அது வெறும் சிலையை மட்டும் உருவாக்க முடியும் என்று வாங்கிவிட்டேன் லவ் யூ டி போண்டா கோழி உன்னோட வயதை சொல்ல மாட்டேன் என்று அன்பு கலந்த காதலை மனைவிக்காக வெளிப்படுத்தியுள்ளார்
இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் மகாலட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
View this post on Instagram