குக் வித் கோமாளி சீசன் 6 தொடங்குவது எப்போது? அப்டேட் கொடுத்த ஷகீலா..!
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்ற அப்டேட்டை ஷகிலா கொடுத்துள்ளார்.

shakeela latest update for cook with comali 6
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் நான்காவது சீசனோடு குக் வித் கோமாளி தயாரிப்பு நிறுவனமும் செஃப் வெங்கடேஷ் பட்டும் விலகினர். அதனைத் தொடர்ந்து ஐந்தாவது சீசனுக்கு செஃப் தாமுடன் சேர்ந்து புதிய செஃப்பாக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார்.
அனைவரும் எதிர்பார்க்கும் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் குறித்து ஷகிலா பேசியுள்ளார். அதாவது அவர் மாதம் பட்டி ரங்கராஜிடம் பேசியதாகவும் அப்போது குக் வித் கோமாளி சீசன் 6 அடுத்த மாதம் இறுதியில் தொடங்கப்படும் என்றும் சொல்லியதாக கூறியிருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

shakeela latest update for cook with comali 6