
ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என ஜூலியின் ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.
Bigg Boss Ultimate Julie Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற என்ற நிகழ்ச்சி ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

முதல் போட்டியாளராக சினேகன் மற்றும் இரண்டாவது போட்டியாளர்களாக ஜூலி மேலும் மூன்றாவது போட்டியாளராக வனிதா விஜயகுமார் பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஜூலி பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிடப்பட்டது.

இந்த வீடியோவில் மத்தவங்களுக்கு குறும்படம் போட வைக்கிறேன் என கூறியிருந்தார். ஜூலி ஓவர் பில்டப் கொடுத்து பேசிய இந்த புரோமோவை பலரும் கலாய்த்து வருகின்றனர்.