Tharshan And Sanam Shetty
தர்ஷன் தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலான தீர்ப்பை சென்னை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Bigg Boss Tharshan Issue : தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தர்ஷன். இவருக்கும் இவருடைய காதலி சனம் ஷெட்டிக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை தான் சமூக வளையதளங்களில் ஹாட் டாபிக்.

இவர்கள் இருவரும் மாறி மாறி குற்றம் கூறி வருகின்றனர். சனம் ஷெட்டி தர்ஷன் என்னை ஏமாற்றி விட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் தர்ஷனும் நீதிமன்றம் சென்று பெயில் கேட்க அவருக்கு பெயில் வழங்க முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தர்ஷன் கைதாக வாய்ப்பிருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

நீதிமன்றம் இப்படியான ஒரு தீர்ப்பை வழங்கி இருப்பது தர்ஷன் தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.