பிக்பாஸில் குண்டாக இருக்கும் போது அணிந்த அதே ஆடையை தற்போது அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஷெரின்.
Bigg Boss Sherin Transformation : தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷெரின்.
இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது மிகவும் குண்டாக காணப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய எடையை கிட்டத்தட்ட 10 கிலோ வரை குறைத்துள்ளார்.
தற்போது ஸ்லிம்மாக செம அழகாக இருக்கும் ஷெரின் குண்டாக இருக்கும் போது பிக்பாஸ் வீட்டில் அணிந்த அதே உடையை மீண்டும் அணிந்து 10 கிலோ குறைத்ததை குறித்து பதிவிட்டுள்ளார்.
இதோ அவருடைய பதிவு