Bigg Boss Oviya Helen‘s Viral Tatoo

YouTube video

Latest Updates on Annaatthe Shooting : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இறுதியாக முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது நவம்பர் மாத இறுதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க படக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை படமாக்கி விட்டு அடுத்த வருட ஆரம்பத்தில் ரஜினியை வைத்து ஷூட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் நிச்சயம் புகைப்படம் அல்லது அப்டேட் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த தகவல் அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.