Bigg Boss Kavin
பிக் பாஸ் கவினின் புதிய திரைப்படம் தொடங்கி ஷூட்டிங்குகள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக சீரியல் நடிகராக வலம் வந்தவர் கவின். மேலும் இவர் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகனாக கால் பதித்தார்.

இந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். லாஸ்லியாவுடன் காதலிலும் விழுந்தார்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க கவின் புதிய படத்தில் ஒப்பந்தமாகி அந்த படத்தின் படப்பிடிப்புகளும் தொடங்கியுள்ளன.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.