விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் முடிவை நெருங்கி கொண்டிருக்கிறது.

தற்போது பைனல் டே குறித்த அப்டேட்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 29-ம் தேதி சனி கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சி இரவு 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது.

மேலும் பைனல் (செப்டம்பர் 30)ம் தேதி அன்று இரவு 8 மணி முதல் 12 மணி வரை என மொத்தம் 4 மணி நேரம் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனலில் ஜெயிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகவே உள்ளது.