Bigg Boss4 Eviction

இனி பிக் பாஸ் போட்டியாளர்களை வீட்டில் இருந்து வெளியேற்ற மக்களின் ஓட்டு முக்கியமல்ல என்பது போல அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ்.

Bigg Boss Day9 Promo1 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கி விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். முதல் வாரம் யாரும் வெளியேற்றப்பட நிலையில் இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடந்து முடிந்தது.

மக்களின் போட்டிகளின் படியே பிக் பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள். ஆனால் கடந்த மூன்று சீசனிலும் இதில் பல குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இந்த நிலையில் மக்களின் ஓட்டையும் மாற்றியமைக்கும் சக்தியாக முதல் முறையாக புதிய முறை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அதுகுறித்த ப்ரோமோ வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் மொதல்ல நீங்க எப்போ மக்களின் ஓட்டை வைத்து போட்டியாளரை வெளியேற்றி இருக்கீங்க?? எப்பவுமே உங்க முடிவு தானே ஃபைனல் என கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.